
மழை காலத்தில் தூங்கவிடாமல் எழுப்புவது பாவம் என்றால், எழுப்பியதோடு நில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது பெரும் பாவம். இந்த பாவத்தையும், பெரும்பாவத்தையும் என் மாமா செய்து கொண்டிருக்கிறார். என்ன கொடுமை, அட வேலைக்கு போய் தான் ஆகணும் என்றால் அவங்க அவங்க போக வேண்டியது தானே! எதுக்கு என்னை எழுப்பி, என் சாபத்தை வாங்கிட்டு!
எங்க ஊர்ல மழைகொட்டிட்டு இருக்கு. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மழை தானாம். சூடா ஒரு சூப் சாப்பிட்டு கொண்டே, தோட்டத்தை பார்த்திட்டு இருக்கிறேன். அதோட பாலாண்ணா எழுதிற தினகுறிப்பிகளை படிச்சிட்டு இருக்கேன். பாலாண்ணா எதை எழுதினாலும் ரொம்ப சூடு பிடிக்குது. நான் எதை எழுதினாலும் ஏதோ நானே மிரட்டி இரண்டு பேரை படிக்க வைச்சால் தான் உண்டு. (ரகசியத்த வெளில சொல்லிட்டமோ?) பேசாம பாலாண்ணாவிடன் "பதிவில் எழுதுவது எப்படி" என ஒரு வகுப்பு எடுக்க சொல்லலாம் என்றிருக்கிறேன். பாவம் என்னை போல ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆ பேரு இருக்கிறாங்க.
மறுபடி மழைக்கு வந்திடலாம். வலைப்பூவில் மழை என்றாலே நினைவுக்கு வருவது மழை ஸ்ரேயா தான். சினிமாவில் மழையை வைத்து எத்தனை அராஜகம் செய்கிறார்கள். என்ன எப்பவாவது மழை அராஜகம் செய்யும் போது தான் பல உயிர்கள் போய்விடுகின்றது. அண்மையில் இலங்கையில் 22 பேர் பலியாகி உள்ளனர், 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். யுத்தத்தால் இடம்பெயர்வது தான் இலங்கையில் காலம் காலமாக பேணப்பட்டு வரும் பாரம்பரியம். இதில இது வேற...ஹிம்ம்ம். அப்புறம் பார்த்தா லக்கிண்ணா ஊர்ல கூட கொஞ்ச நாள் முன்னாடி மழை ரொம்ப பெய்து வெள்ளம் வந்ததாக சொன்னார். நீந்தி வந்து தானே பதிவே போட்டாராம் என்றால் பார்த்துக்குங்க!
ரொம்ப மழைய பார்த்தா, பிழைப்பை யார் பார்ப்பது என தொலைபேசி எடுத்து கேட்கும் அளவுக்கு என் வேலைத்தளம் முன்னேறிவிட்டதால், இத்துடன் மழைப்பதிவை நிறுத்திக்கலாம். (தப்பிச்சிட்டிங்க என கனவு வேண்டாம்) விடாது கறுப்பு...
ஒரு மழைக்கவிதை. பாலாண்ணா படித்ததில் பிடித்து வலைப்பூவில் எழுதியுள்ளார்.
மழை= கவிதை
மழை வந்தது...
ஒரு குளிருகின்ற நெருப்பின் தகிப்பில்
அதன் பொழிவு
இயல்புடைத்துச் சீறும் காளையென
அதன் தினவு
கொடூரம் நிரம்பி வழியும்
கொலையாளியின் நடையாய்
மழையின் திசை விரைவு
பெருங்காற்றின் துணையோடு
மானுடத்தின் மீது படையெடுத்தது
மழை
தொடர்ந்து படிக்க: மழை கவிதை
அப்புறம் கேட்க மறந்திட்டனே, தலைப்பில இருக்கிறது ஒரு மழைப்பாட்டு. மீதி வரிகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்.


24 comments:
தூய்ஸ்
சிட்னியில் மழை எண்டதுக்காக இப்பிடி வத்தி வைக்கக் கூடாது சொல்லிப்போட்டேன்.
சின்னப்பிள்ளைகளா இருக்கேக்க மழை வா வெயில் போ எண்டு எண்டு சொன்னா மழை நிண்டுடுமாம். வெள்ளம் கலக்கியிருக்கிறீங்களோ ஊரில்?
கானாஸ்,
நான் நல்ல பிள்ளை..ஆமா வத்தி என்றால் வத்திகுச்சியா? ;)
//சின்னப்பிள்ளைகளா இருக்கேக்க மழை வா வெயில் போ எண்டு எண்டு சொன்னா மழை நிண்டுடுமாம்.//
நீங்க சொல்லிபார்த்திங்களா? நிண்டதா? முதல்ல அதை சொல்லுங்க.
// வெள்ளம் கலக்கியிருக்கிறீங்களோ ஊரில்?//
நீங்க வேற...ஊரில அண்ணாக்களோட வாழைகுத்தியில் படகே ஓட்டியிருக்கேன். அப்புறம் அண்ணாக்கள் பெரியம்மாட்ட அடிவாங்கினத எல்லாம் நான் மறந்திட்டன்..கிகிகி
நீங்க?
வத்தி வைக்கிறதெண்டா கோள் மூட்டுறது, மழை வா எண்டு சொல்லி மழைய நிப்பாட்டமாட்டன் ஏனெண்டா வெள்ளம் கலக்கவேணுமே. நாங்கள் காணாத வெள்ளமே
பயங்கரமா கொட்டுது போல மழை கரைஞ்சு போய் எழுதின மாதிரி இருக்கு...
அது சரிதான் சின்ன வயதில மழையைக்கண்டா ஒரு விதமான கொண்டாட்டம்தான் அதுவே கொஞ்சம வயது வந்தாப்பிறகு மழையெல்லாம வேறமாதிரி ஆகிப்போட்டுது...
மழையோடு நிறைய அனுபவங்கள்...
'மழையே மழையே மெத்தப்பெய்/மண்ணில் வெள்ளம் நிறையப் பெய்' என்றமாதிரித்தான் நான் அறிந்திருக்கின்றேன். சாதி குறித்த பெயர்கள் பாவிக்கப்படும்போது அது எந்தவகையில்/எவரால் பாவிக்கப்படுகின்றது என்பது குறித்து அவதானமாயிருத்தல் நல்லது போலத்தோன்றுகின்றது. நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு தூயா..! கிராமத்தில் இருக்கும்போது நான் அனுபவசிச்ச மழை நினைவுக்கு நகரவாழ்க்கையில் இல்லை. லேசான தூறல் விழுந்து நின்றவுடன் வருமே ஒரு மண்வாசம்..என்ன ஒரு அருமை.. திடுக்கென்று பெய்யும் மழையால் நிரம்பும் ஏரிகள், குளம் குட்டைகள் காற்றினால் விழும் மரக்கிளைகள் சாயும் தோட்ட குடிசைகள்.. இதெல்லாம் பார்க்கும் விதம் நினைவுக்கு வருகிறது..
அருமையான பதிவு. நினைவுகளை மீட்டெடுக்கிறது.
//
கானா பிரபா said...
வத்தி வைக்கிறதெண்டா கோள் மூட்டுறது, மழை வா எண்டு சொல்லி மழைய நிப்பாட்டமாட்டன் ஏனெண்டா வெள்ளம் கலக்கவேணுமே. நாங்கள் காணாத வெள்ளமே
//
வெள்ளம் கண்ட பின், வீட்டில வாங்கி இருக்கணுமே! அதை சொல்லலை ;)
//
தமிழன்... said...
பயங்கரமா கொட்டுது போல மழை கரைஞ்சு போய் எழுதின மாதிரி இருக்கு...
அது சரிதான் சின்ன வயதில மழையைக்கண்டா ஒரு விதமான கொண்டாட்டம்தான் அதுவே கொஞ்சம வயது வந்தாப்பிறகு மழையெல்லாம வேறமாதிரி ஆகிப்போட்டுது...
மழையோடு நிறைய அனுபவங்கள்..
//
அதே அதே..
இன்னமும் நிற்கவில்லை.
:)
//
j said...
'மழையே மழையே மெத்தப்பெய்/மண்ணில் வெள்ளம் நிறையப் பெய்' என்றமாதிரித்தான் நான் அறிந்திருக்கின்றேன். சாதி குறித்த பெயர்கள் பாவிக்கப்படும்போது அது எந்தவகையில்/எவரால் பாவிக்கப்படுகின்றது என்பது குறித்து அவதானமாயிருத்தல் நல்லது போலத்தோன்றுகின்றது. நன்றி.
//
ஆகா, இது ஒன்னு இருக்கா.
தெரியாம சொல்லிபோட்டேன்.
நல்ல காலம், நீங்க சொன்னிங்க...
உசாராகிட்டேன்.
ஒரு சின்ன சந்தேகம். வண்ணான் என்பது சாதியையா குறிக்கின்றது?
சலவைத்தொழில் செய்பவரை குறிப்பது இல்லையா? நான் இது தொழில் சார்ந்த பெயர் என நினைத்திருந்தேன் இத்தனை நாளும்..
//
பூக்குட்டி said...
ரொம்ப நல்லா இருக்கு தூயா..! கிராமத்தில் இருக்கும்போது நான் அனுபவசிச்ச மழை நினைவுக்கு நகரவாழ்க்கையில் இல்லை. லேசான தூறல் விழுந்து நின்றவுடன் வருமே ஒரு மண்வாசம்..என்ன ஒரு அருமை.. திடுக்கென்று பெய்யும் மழையால் நிரம்பும் ஏரிகள், குளம் குட்டைகள் காற்றினால் விழும் மரக்கிளைகள் சாயும் தோட்ட குடிசைகள்.. இதெல்லாம் பார்க்கும் விதம் நினைவுக்கு வருகிறது..
//
ஏன் பங்கு..மழையில விளையாடினதில்லையா?
//ஏன் பங்கு..மழையில விளையாடினதில்லையா?//
எனக்குதான் குளியல் பிடிக்காதே.. உன்னைபோலதான் நானும்..
//
பூக்குட்டி
எனக்குதான் குளியல் பிடிக்காதே.. உன்னைபோலதான் நானும்..
//
குடும்ப மானத்தை இப்படியா வாங்குவது...
/ஒரு சின்ன சந்தேகம். வண்ணான் என்பது சாதியையா குறிக்கின்றது?
சலவைத்தொழில் செய்பவரை குறிப்பது இல்லையா? நான் இது தொழில் சார்ந்த பெயர் என நினைத்திருந்தேன் இத்தனை நாளும்../
தூயா, எனக்கும் இவை குறித்த அறிதல் மிகக்குறைவே. கே.டானியல் 'எனது கதையில்' இப்படி எழுதுகின்றார்....
"எனது குடும்பத்தொழில் சீலை வெளுப்பு. இதைச்சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான்; அதைவிடவும் ‘தமிழர்’களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதானால் ‘கட்டாடி’ என்று சுருக்கி விடலாம். இதை ஏன் குறிப்பாக நான் கூறவேண்டும்? சமூக அடக்கு முறைக்குள் மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளவு தூரத்திற்குச் சாதியின் கொடுமையை அனுபவித்திருக்க முடியும் என்பதனை எனது வாசர்களை அறியவைப்பதற்காகவும், ‘இந்தாள் நெடுகச் சாதியைத்தான் எழுதுது: ஏன் இப்படிச் செய்யுது?’ என்று என்மீது கேலிக்கீதம் பாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை இவர்கள் சற்றுத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவுமேயாகும்."
மேலும் வாசிக்க,இங்கே சென்று பாருங்கள்:
http://www.noolaham.net/project/02/160/160.htm
நல்ல பதிவு. வண்ணான் என்பது தொழில் சார்ந்து அழைக்கப்படும் ஒரு பெயர்தான். ஒரு கூட்டம் அதை தங்கள் குலத்தொழில் என்று கொண்டு அதை தமக்கான சாதி என்று சொல்லிக் கொண்டு தம்மையும் தமது தொழிலையும் தாழ்த்தி ஒடுங்கி வாழ்கின்றனர் அது அவர்களின் சிந்தனைத் தவறே அன்றி தொழில் தவறல்ல.
வண்ணான் வீட்டில் மழை என்று கேட்கக் காரணம் இருக்கிறது. மழை பெய்தால் அவர்களுக்கு உடுப்புத் தோய்க்கும் தொழில் சிறப்புறும் என்ற நோக்கில் இருக்கலாம்.
மண்வாசனை சிறப்பு. நன்றிகள் தூயா.
நன்றி- பூனை.
//
தூயா, எனக்கும் இவை குறித்த அறிதல் மிகக்குறைவே. கே.டானியல் 'எனது கதையில்' இப்படி எழுதுகின்றார்....
//
dj இணைப்பிற்கு மிக்க நன்றி :) படித்துப்பார்க்கின்றேன் :)
//
வண்ணான் வீட்டில் மழை என்று கேட்கக் காரணம் இருக்கிறது. மழை பெய்தால் அவர்களுக்கு உடுப்புத் தோய்க்கும் தொழில் சிறப்புறும் என்ற நோக்கில் இருக்கலாம்.
//
அப்படித்தான் நானும் நினைத்தேன்..அவர்கள் நல்லாயிருக்கணும் என்பதால் தான் மழைநீர் அங்கு போகட்டும் என பாடுவதாக நினைத்திருந்தேன்
மீரடல் தூயவிற்கு கைவந்த கலை அதான் இப்படி மழை அடி. ஐ லவ் மழை, சாரல் மழை அதான் வலி தெரியல;)
பாலாஅண்ணா கவிதை நன்று :)
//மீரடல் தூயவிற்கு கைவந்த கலை//
ஏன் இந்த கொலைவெறி ஜீவ்ஸ்??
வண்ணானாகப் பிறந்திருந்தால்தான் தெரியும் அதன் வலி். உங்களுக்கு சாதிபற்றி அதிகம் தெரியாதது நல்ல விதயம்தான். ஆனால் இப்படியான தலைப்புகளை தவிர்க்கவேண்டும் என்பதும் தெரியாமல் போய்விடுகிறதே :(
இதில் பெரிய சர்ச்சைகள் இல்லை என்பது ஆறுதல். நீங்கள் சொல்லியபடி இனிமேல் அவதானமாக இருக்கவும்
வண்ணான் என்பது சாதியா? தொழில்முறை பெயர் தானே?
//நீங்கள் சொல்லியபடி இனிமேல் அவதானமாக இருக்கவும்//
சரி :)
தூயா.. மழைப்பதிவுக்கு வாழ்த்தும், நன்றியும்..
தமிழ்நாட்டில் வண்ணான் என்பது மிக நேரடியாக சாதியையே குறிக்கும். (அரசு ஆவணங்களின்படி 'மிக பிற்படுத்தப்பட்டோர்' என்ற வரையறைக்குள் வருவார்கள்.)ஈழத்திலும் அவ்விதம்தான் என நான் வாசித்த டேனியல் மற்றும் ஷோபா ஷக்திகளின் எழுத்துக்கள் சொல்கின்றன.
இங்கிருக்கும் உங்கள் வரிகளும், பின்னூட்டங்களும், துணி வெளுக்கும் தொழிலையே வண்ணான் என்ற சொல் குறிப்பதாகவும், அது சாதியை சுட்டிக்காட்டுவது தெரியாது எனவும் சொல்கின்றன.
சாதி என்பது தொழிலை அடிப்படையாக வைத்துதான் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். எப்படி மணி ஆட்டுபவனை எல்லாம் பார்ப்பான் என மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்களோ, அதுபோல துணி வெளுப்பவனை வண்ணான் என்றுதான் பொதுப்புத்தி புரிந்து வைத்திருக்கிறது. ஆனால் மணி ஆட்டுபவன் பார்ப்பான் என்பதனால் அது அவனது தொழில் மட்டும் என்று சுருக்கிவிட முடியாதில்லையா.. அது அவனது சாதியும் கூட. அதுபோலவே துணி வெளுக்கும் வண்ணானுக்கும் அது தொழில் மட்டுமல்ல.. அதன் அடிப்படையில் சாதியும் இருக்கிறது. இது மிக அடிப்படையானது. இந்த கட்டுரையில் அந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததால் சொல்கிறேன்.
உங்கள் வலைப்பக்கத்தில் இந்த பார்ப்பான் என்ற வார்த்தையெல்லாம் அன்பார்லிமென்டரி வார்த்தையாக இருக்குமென நினைக்கிறேன்:) உங்களை அசௌகர்யப்படுத்தும் என நினைத்தால் இந்த பின்னூட்டத்தை நீங்கள் படித்தால் மட்டும் போதுமானது.
தூயா, கடும் வேலை பளுவின் இடையே படிக்க நேர்ந்தது. உங்களுக்கு தமிழரின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாய் இருந்த இருக்கிற சாதிய பாகுபாடு குறித்து அதிகம் அறியாமலிருப்பது ஒரு புறம் மகிழ்வாக இருந்தாலும் ஒரு சில சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக வாழ்நாளெல்லாம் மற்றவரினை விட ஒடுக்கப்பட்டும் ஒதுக்கபட்டும்,உழைப்பு உறிஞ்சப்பட்டும் இருக்கிற மக்களை அதன் பின் இது போன்ற சாதி குறித்த சொற்கள் கொண்டு இடைச்சாதியினரும் மேற்சாதியினரும் இகழும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முடிந்தால் தலைப்பை மாற்றிவிடவும்.
என்னை விட விளக்கமாய் எழுதிய ஆழியூரானுக்கு நன்றி
வணக்கம் தூயா நான் உங்களின் "Blogspot" ஐ பத்தி ஆனந்த விகடன் மூலம் கேள்வி பட்டேன்.
உங்கள் சமையல் ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
எனது பேர் நளினி, நான் Sydney இல் வசிக்கிறேன். எனக்கு சமையல் நல்ல ஆர்வம் எனது email : rajkumar.nalini@gmail.com. Pls contact me.
நன்றி
நளினி
Post a Comment