BMW வில் கூட எமன் வரலாம்





வழமையான ஒரு செவ்வாய்கிழமை. பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு வேலைத்தளத்தை நோக்கி காரில் பயணித்து கொண்டிருக்கின்றேன். கைத்தொலை பேசி அலறுகின்றது. கார் ஓட்டும் போது யார் எத்தனை முறை அழைத்தாலும் பதிலளிப்பதில்லை என சமீபத்தில் தான் ஒரு சத்தியம் பண்ணியது நினைவுக்கு வந்து தொலைத்தது. சாலை விளக்கு சிவப்பானதும் யார் என பார்த்தால் என்னுடைய மாமா. (உனக்கிருக்கும் 1000 மாமாவில் இது யார் என கேட்கப்படாது.) அதுவும் எனக்கு அதிகம் செல்லம் தரும் மாமா. காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பேசினால், மாமா மிகவும் பதட்டமாக இருப்பது குரலில் தெரிந்தது. போனை வையுங்க என சொல்லிவிட்டு மாமா வீட்டிற்கு போனால், மாமாவின் கண்களில் கண்ணீர். இதுவரை மாமா அழுது பார்த்ததில்லை என பொய் சொல்ல மாட்டேன். எங்கள் குடும்பத்தில் சில உயிர்கள் போனபோது பார்த்ததுண்டு. ஆனால்? கண்ணீரே எனக்கு மறுபடி ஒரு உயிரா என அதிர்ச்சி தந்தது.

உடைந்து ோயிருந்த மாமாவிடம் பேசுவதற்கு சுவரில் முட்டி கொள்ளலாம். பதில் சொல்லவே மாட்டார். என்ன தான் நடக்குது பார்க்கலாம் என பக்கத்தில் உட்கார்ந்தேன். அந்த நேரம் பார்த்து மாமாவின் வேலைத்தளத்தில் இருந்து தொலைபேசி. எடுத்து பேசிய எனக்கே மூச்சு நின்று விடும் போலிருந்தது.

காரணம் மாமாவுடைய வேலை நண்பர் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது தான். மாமா IBM இல் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் மிகவும் இனிய நண்பனாக பழகிய மனிதன். மாமாவுக்கு மேலதிகாரியாக இருந்த போதும் சரி, சரிசமமாக மாமாக்கு பதவி உயர்வு கிடைத்த போதும் சரி; ஒரு மாற்றமும் காட்டாமல் இனிமையாக பழகிய ஒரு அற்புதமான மனிதன். திருமணமாகி ஒரு வருட விழாவிற்கு நிச்சயம் வரவேண்டும் என கேட்டதோடு நிற்காமல், தன் மனைவிக்கு சேலை கட்ட விருப்பம் அதனால் பரிசாக சேலை எடுக்க உதவ வேண்டும் என கேட்ட மனிதன். சேலையோடு நானே வருகின்றேன் என நான் சொன்னதை கேட்டு "bless you sweet heart" என சொன்ன மனிதன், பதவி உயர்வு கிடைத்து புது BMW கார் வாங்கி இரண்டே நாட்களில்.....

தப்பு இவர் காரை இடித்து சென்ற பெரிய வாகன ஓட்டியுடையது தானாம். இன்சுரன்சில் பணம் அதிகம் கிடைக்குமாம். BMW இல் airbags அனைத்து பக்கமும் இருக்கும் போது எப்படி தலையில் அடிபடும் என ஆராய்கின்றார்களாம். அவர்களும் பணம் குடுக்க வேண்டி வருமாம். என்ன வந்து என்ன, ஒருவருடத்தில் கணவனை பிரிந்த அந்த பெண்ணிற்கு கணவன் வருவாரா!

நண்பனின் பிரிவால் உடல் நலம் கெடும் நிலைக்கு வந்த என் மாமாவின் இழப்பு தான் ஈடாகுமா? இருவருமாக வேலை விடயமாக வெளியே செல்ல இருந்தார்களாம். சற்றே தூர இடத்தில் இருப்பதால் சீக்கிரமே புறப்பட்ட மனிதர் உயிரற்று 4 நாட்களில் பின்னர் தான் வீடு போய் சேர்ந்தாராம். கிளம்புவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்த மாமாவிற்கு காவல் அதிகாரிகள் தான் தகவல் தெரிவித்தார்களாம்.

வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்டுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியம். வீதியில் பல வாழ்க்கைகள்...அழியாதீர்கள்...அழித்துவிடாதீர்கள்...

இறைவா அந்த சேலையை நான் என்ன செய்வேன்... ஓராண்டு திருமணவிழா வரும் போது நான் என்ன செய்வேன்....

அந்த மனிதனின் பெயர் மார்க்.... அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றேன்.

(சம்பவம் நடந்து மாதங்கள் ஆகிவிட்டது. அப்போது இதை எழுதும் மனவலிமை எனக்கு இருக்கவில்லை)

சாலையில் போகும் போது மிகவும் கவனமாக இருங்கள் உறவுகளே...

13 comments:

மங்களூர் சிவாsaid...

மிக்க வருத்தமான விசயம்
:(

இராம்/Raamsaid...

//
சாலையில் போகும் போது மிகவும் கவனமாக இருங்கள் உறவுகளே...//

ஹ்ம்ம்ம்ம்

செந்தழல் ரவிsaid...

காரில் செல்பவர்களை விட, நடந்தே செல்லும் எங்களுக்கு இன்னும் ஆபத்து அதிகம்.

அவருடைய மரணத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thooyasaid...

//காரில் செல்பவர்களை விட, நடந்தே செல்லும் எங்களுக்கு இன்னும் ஆபத்து அதிகம்.//

இங்கு அந்த பயம் இல்லை..

ஆனால் வாகனங்களால் வாகனங்களுக்கு பிரச்சனை தான்..

வல்லிசிம்ஹன்said...

நாம் மட்டும் ஒழுங்காக ஓட்டினால் போதுமாம்மா. இந்தப் பெரிய மாக் ட்ரக்குகளைப் பார்க்கும்போது உடலே நடுங்குகிறது. ஹைவேயில் சமீபத்திய பயணத்தில் எங்களை டெயில்கேட் செய்தபடி வந்த ஒரு லாரி ஓட்டுனரை மறக்க முடியாது.

Aravinthansaid...

உங்களின் வாழ்க்கையில் அடிக்கடி சோகங்கள் வருகிறது.

Anonymoussaid...

May his soul rest in peace!

கானா பிரபாsaid...

செந்தழல் ரவியை வழிமொழிகிறேன், சும்மா போனாலே தேடி வந்து இடிக்கிறாங்கள்.

உருப்புடாதது_அணிமாsaid...

மிக்க வருத்தமான விசயம்
ஆழ்ந்த அனுதாபங்கள்.

ILAsaid...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜோசப் பால்ராஜ்said...

இறப்பு குறித்த செய்திகளை அறியும் போதெல்லாம் மிக வேதனையாக இருக்கின்றது. அதுவும் இந்த செய்தி ரொம்ப கலங்க வைக்கிறது.
என் மாமா நான் பைக், கார் ஓட்ட ஆரம்பித்த புதிதில் சொல்லும் அறிவுரை என்னவென்றால், நீ ஒழுங்கா ஓட்டுவன்னு எங்களுக்கு நல்லா தெரியும், ஆனா ரோட்ல எல்லாரும் அப்டி ஓட்டுவானான்னு தெரியாது. எதிர்ல வர்றவன் எல்லாம் உன்னைய இடிக்கத்தான் வர்றான்னு நினைச்சுக்க, அப்பத்தான் உன்னால கவனமா இருக்க முடியும்னு சொல்லுவாரு. எதிர்ல மட்டும் இல்ல, பின்னாடி வர்றவன், இரண்டு பக்கத்துலயும் வர்றவன் எல்லாருமே நம்ம இடிக்கத்தான் வர்றாங்கன்னு நினைச்சுக்கிட்டுத்தான் வண்டி ஓட்டணும் போல இருக்கு.
இறந்தவர் ஆன்ம சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

Jeevansaid...

Sometimes even if we are alert, to be good at driving and keep distance from danger it comes in beside form.

his weeding day is over or yet to come?

Hugss dear.

தமிழன்...said...

ம்ம்ம்...