வீழுமுன் சில வரிகள்




துவக்கு பிடிக்கிற கைகளுக்கு பேனாவும் பிடிக்க தெரியும் என்பதற்கான அழகான ஆதாரமொன்று:

கப்டன் வாமகாந்த் என்ற மாவீரனின் வரிகள் "வீழுமுன் சில வரிகள்" என பெயரிட்டு 2006ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டனர்.. தன் கால்களில் ஒன்றை இழந்திருந்தும் ஈழத்திற்காய் இறுதிவரை உழைத்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி கொஞ்ச நாட்களிலேயே மட்டக்களப்பில் பண்ணையொன்றில் தோழர்களுடன் இருந்போது எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். ஒரு வீரனை மட்டுமின்றி, ஒரு கவிஞனையும் நாம் இழந்து நிற்கின்றோம். வீழுமுன் சிலவரிகளில் இருந்து ஒரு கவிதை:


*****************************************************************


என் கால்கள் வலியன.
நான்
வாழ்வையிழக்கலாம்.
என் பாதம் பதித்த சுவடுகள்
இந்த மண்ணில் நிலைக்கும்.

நாளைய தூண்களில்
நல்வழிகாட்டலாய்....
என் பாதம் பதித்த சுவடுகள்
தேசத்தின் நிலையாக
தீ சுமந்து நிற்கும்
புதியவேதமாய்.
புழுதி சுமந்த காற்றில்
மூச்சுக் கலந்துபோக
வலிய என் பாதங்களாக
முளைத்த இனமொன்று
முட்டி மோதியெழுந்து
தடையாக எழும்
கரங்களைத் தகர்க்கும்


***************************************************************

5 comments:

ஆயில்யன்said...

//என் பாதம் பதித்த சுவடுகள்
இந்த மண்ணில் நிலைக்கும்.
நாளைய தூண்களில்
நல்வழிகாட்டலாய்....
//

இவர்களை போன்ற ஈழ வீரர்களின் எண்ணங்களில் எழுந்து நிற்கும் எம் சகோதரர்களின் தேசம் நேசமாய்...!

Thooyasaid...

எதற்காக இல்லாவிடினும், எமக்காக தம்மையே அற்பணித்தவர்களுக்காக தன்னும் ஈழம் மலர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் இருக்கும் ஆயில்யன்..

King...said...

Thooya said...
\
எதற்காக இல்லாவிடினும், எமக்காக தம்மையே அற்பணித்தவர்களுக்காக தன்னும் ஈழம் மலர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் இருக்கும் ஆயில்யன்..
\

:))

King...said...

?

King...said...

??????????