லோஷன்: அந்த குழந்தை தேடுமே


லோஷன் அவர்களின் கைது பற்றி முன்னரே அறிந்து கொண்ட போதும், இணையத்தில் சொல்வதற்கு மனத்திடம் இருக்கவில்லை. [விரும்பவும் இல்லை என்பதே உண்மை]. உடனேயே திரும்பிவிடுபவரை எதற்காக இணையத்தில் வேறு செய்தி போட்டு வதைக்கணும் என நினைத்தேன். தினமும் காலையில் வந்தாச்சா வந்தாச்சா என விசாரிக்க ஆரம்பித்தது, இன்று காலை வரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.


பலவற்றை எழுத மனது துடித்தாலும், வார்த்தைகளில் எதையும் எழுத என்னால் முடியவில்லை. இன்றிலிருந்து 19 நாட்களின் முன்னர் தன் மகனின் ஒரு வயது பூர்த்தி பற்றி சொன்னது தான் இப்போதும் என் நினைவுகளில்....அந்த குழந்தை தேடுமே...


சக பதிவர் ஒருவருக்காக பதிவுகலகமே குரல் குடுக்க தயங்காது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...உங்கள் உணர்வை/ ஆதரவை ஒரு பதிவிலாவது போடலாமே!

10 comments:

பொடியன்-|-SanJaisaid...

நண்பர் லோஷன் உடனே விடுதலை அடையட்டும்.

லூசன்said...

போட்டிருக்கிறோம். பாருங்கள்.
http://irakasiyam.blogspot.com\

தமிழன் என்றால் பயங்கரவாதி என்ற நிலைதான் இன்று சிறீலங்கா நாட்டில். எவரும் ஒன்றும் செய்ய முடியாது. இவைகள் எமக்கப்பால் உள்ளவை. எம்மால் இப்படியான இடங்களில் கருத்துக்களைப்பதிக்க மட்டுமே முடியும். இவர் பிரபலமானவர் என்ற படியால் எமது கருத்துக்கள் பதிவாகின்றன. ஆனால் யாருமில்ல முகமும் முகவரியும் அறியாத அந்த அப்பாவி மக்களின் நிலை என்ன.
இருந்தாலும் வலைப்பதிவர் என்கின்ற வகையில் அவர் விடுதலை செய்யப்படவேண்டி நானும் பிரார்த்திக்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப்said...

http://rishanshareef.blogspot.com/2008/11/blog-post.html

எனது ஆதங்கத்தை இங்கே பதிந்திருக்கிறேன் சகோதரி :(

சந்தனமுல்லைsaid...

தூயா..எனக்கும் அந்த எண்ணம்தான்.
http://sandanamullai.blogspot.com/2008/11/blog-post_7935.html எனது எண்ணங்களையும் பதிந்திருக்கிறேன்!

கார்க்கிsaid...

வருத்தமான் விஷயம். நல்ல நண்பர். நிச்சயம் செஞ்சிடலாம் தூயா..

Thooyasaid...

வணக்கம் சஞ்சய்..எனது அவாவும் அதுவே. மிக்க நன்றி.

லூசன், உங்கள் பதிவை படித்து பதில் அளித்துள்ளேன். நன்றிகள்.

ரிஷான், உங்கள் பதிவையும் படித்தேன். மிகவும் வேதைனையான சம்பவம். எம்மில் ஒருவருக்கென வரும் போது வலி அதிகம் தான்..

சந்தனமுல்லை..மிக்க நன்றி..சகபதிவர் எனும் முறையில் நாமெல்லாம் குரல் குடுக்க வேண்டும். உடனே பதிவிட்டு உங்கள் ஆதரவை காட்டியமைக்கு நன்றிகள்.

கார்க்கி, மிக்க நன்றி. பதிவு போட்ட உடனே, ஒரு செய்தி அனுப்பிவிடுங்கள்.

நசரேயன்said...

லோஷன் உடனே விடுதலை அடைய வேண்டும்

ச்சின்னப் பையன்said...

மிகவும் வருந்தத்தக்க விஷயம். லோஷன் சீக்கிரம் விடுதலை அடையட்டும்.

Jeevansaid...

don't know how is loshan, but i wish your friend get released soon.

Thooyasaid...

லோஷனுக்காக பிரார்த்தித்த என் உறவுகளுக்கு நன்றிகள்...

அவர் நலமே வீடு திரும்பியுள்ளார். இனிமேல் தான் அவருக்கு எங்கள் பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படும்.