தமிழோடு வந்தாச்சு


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர், இன்று தான் தமிழில் ஒரு பதிவு போட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகா..தமிழ் இனிக்கும் என கேட்ட போதெல்லாம் அது என்ன ஸ்வீட்டா இனிக்க என்று கேட்பவர்களில் நானும் ஒருவர். ஆனால் நிஜமாவே இன்று இனிக்கிறது..கிகிகி

7 வாரங்களாக யாருடைய பதிவையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடை இணையத்தை பற்றி தான் சென்ற பதிவிலேயே சொல்லி இருந்தேனே. அதனால் நிறையவே படிக்காமல் விட்டு விட்டேன். இனிவரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமா படிச்சிடுறேன். ஏன் சொல்றேன் என்றால், இப்போ தமிழ்மணத்திற்கு போனால் ஒன்றுமே புரியவில்லை. ஒரு வருடம் காணாமல் சென்றுவிட்டு வந்தது போல உள்ளது.

சிறுது காலம் காணாமல் போன என்னை, கண்டுபிடிக்க மின்னஞ்சல் மூலமாக முப்படைகளையும் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் மின்னஞ்சல்களுக்கு பதில்கள் நிச்சயம் இன்று தூங்காமலாவது போட்டு விடுகின்றேன்.

பதிவென்று எதையாவது இன்று எழுதிவிடுவது என நினைத்திருந்தேன். ஆனால் சிந்தாஸை பற்றி செய்தி...எதை எழுதுவதென்றே தெரியவில்லை. நான் வலைப்பூவிற்கு வந்ததில் இருந்து என்னை ஊக்குவித்தவர்களில் ஒருவர், இந்த வலைப்பூவின் டெம்ப்ளேட்டை எனக்காக செய்து தந்தவர். என்னுடைய ஒவ்வொரு வலைப்பூ டெம்ப்ளேட்டிலும் சிந்தாஸிற்கு பங்கு உண்டு....எதை எழுதுவதென்றே தெரியவில்லை..சிந்தாஸ் என்றும் எங்கள் நினைவில்...

8 comments:

வந்தியத்தேவன்said...

அன்பும் பண்பும் உடைய என் பங்கை வரவேற்பதில் பெருமையடைகின்றேன்.

வேந்தன்said...

தொடர்ந்து எழுதுங்க...
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்....

cid singaramsaid...

வாழ்த்துகள் சகோதரி! மீண்டும் சமையல் குறிப்புகளை வரைய வாழ்த்துகள் தங்கள் சமையல் ரசிகர்களில் நானும் ஒருவன்..

’டொன்’ லீsaid...

ம்..கண்டு கனகாலம்...:-)

Suresh Kumarsaid...

வருக வருக

முல்லைமண்said...

வருக தூயா வருக.

♥ தூயா ♥ Thooya ♥said...

//அன்பும் பண்பும் உடைய //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....


//தொடர்ந்து எழுதுங்க...
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றி வேந்தன்.

♥ தூயா ♥ Thooya ♥said...

//வாழ்த்துகள் சகோதரி! மீண்டும் சமையல் குறிப்புகளை வரைய வாழ்த்துகள் தங்கள் சமையல் ரசிகர்களில் நானும் ஒருவன்..
//

மிகவும் மகிழ்ச்சி சகோதரா..:)



//ம்..கண்டு கனகாலம்...:-)//

லீ, இந்த படத்தில மாதவன் போல இருக்கிங்க :)


வரவேற்பிற்கு மிக்க நன்றி சுரேஷ் & முல்லைமண் :)