தாதா கிளியும் நானும்




கடந்த 15 நாட்களாக தினமும் 15 மணித்தியாலங்கள் 'வேலை செய்து' (நம்ப மாட்டீங்களே) இன்று தான் ஓய்வு கிடைத்தது. வேலைக்கு போகும் தினங்களில் கடமை போல காலை நடை ( morning walk இது தானே தமிழில்?) செல்வதுண்டு. மனம் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாலும், புத்தி ஏனோ அன்றைய வேலையை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடும். இன்று தான் விடுமுறை தினமாயிற்றே, காலையில் நடக்க சென்ற போது தான் கீழே படத்தில் இருப்பவரை சந்தித்தேன். அழகு தான் இல்ல? என்னை பார்த்து ஒரு முறைப்பு வேறு. பறக்க முதல் ஒரு படம் எடுக்கலாம் என முயற்சித்தேன். "Say cheese, say butter, say milk" என என்ன சொன்னாலும் இந்த கிளி சிரிக்கவே மாட்டேன்னுட்டுது. என்னை பார்த்து "ஏய் தூயா,உன் கமெராவ எடுத்திட்டு ஓடி போய்டு..கொன்னுடுவேன்" அப்படின்னுற போலவே ஒரு பார்வை. தனிய இருக்கேன்னு இம்புட்டு தகிரியமா படம் எடுத்தேன். இது தான் வந்தது. படம் எடுத்ததும் ஒரே ஓட்டமா ஓடி வந்திட்டேன். அந்த கிளி வேற "ஏய் மயிலு, குயிலு, ரயிலு இங்க வாங்கடி யாரோ என்னைய படம் புடிக்கிறாள்" அப்படின்னுட்டுதுன்ன, என் நிலை என்னாவது. இந்த கிளியே ஒரு குண்டு தாதா ரேஞ்சில இருக்கு!

13 comments:

ஆயில்யன்said...

//"Say cheese, say butter, say milk" என என்ன சொன்னாலும் இந்த கிளி சிரிக்கவே மாட்டேன்னுட்டுது//

தமிழ் மட்டும் தெரிஞ்ச கிளி போல :)))

♥ தூயா ♥ Thooya ♥said...

அட இது தெரியாம போயிடிச்சே..தமிழில் பேசி பார்த்திருப்பேனே..எப்படி ஆயில்ஸ் உங்களுக்கு மட்டும் இப்படி யோசனை வருது?

கோபிநாத்said...

\\♥ தூயா ♥ Thooya ♥ said...
எப்படி ஆயில்ஸ் உங்களுக்கு மட்டும் இப்படி யோசனை வருது?
\\

அவருக்கும் இன்னிக்கு லீவு அதான் ;)))

பிரியமுடன்...வசந்த்said...

// "ஏய் மயிலு, குயிலு, ரயிலு இங்க வாங்கடி யாரோ என்னைய படம் புடிக்கிறாள்" அப்படின்னுட்டுதுன்ன, என் நிலை என்னாவது. இந்த கிளியே ஒரு குண்டு தாதா ரேஞ்சில இருக்கு!//

ஹ ஹ ஹா

அதுஎப்படி பெண்ணே பெண்ணுக்கு எதிரியா?

கார்க்கிsaid...

ஹிஹிஹி

வந்தியத்தேவன்said...

என்ன பங்கு உங்க ரேட்மார்க் கிகிகி யை காட்டியிருந்தால் கிளி உங்களுக்கு ஜோசியமே பார்த்திருக்கும்.

affable joesaid...

நீங்கள் வளர்கிறீர்களா இது இந்திய வகை plum head parakeet என் கனவு வளர்ப்பு பிராணிகளில் இதுவும் ஒன்று .

U.P.Tharsansaid...

அட பாவிகளா! மொக்கை பதிவுக்கு. அதைவிட மொக்கையா பதில் போட இத்தனை பேரா. ;-))

ஒருவேளை நம்மள வைச்சு காமடி பண்ணபோறாள் என்று தெரிந்துதான் அந்த சாத்திர கிளி முறைப்பா முகம்காட்டிச்சோ?

Jeevansaid...

hehe... it is so cute and furry thooya!

கரவைக்குரல்said...

//ஏய் மயிலு, குயிலு, ரயிலு இங்க வாங்கடி யாரோ என்னைய படம் புடிக்கிறாள்" அப்படின்னுட்டுதுன்ன//

கூட்டி அடிக்கத்தான் இந்த அழைப்புகள்
கொஞ்சம் சிரிக்க வைத்துவிட்டீர்கள் தூயா,

இறக்குவானை நிர்ஷன்said...

தூயா,
எப்படியிருக்கீங்க.
நீண்ட நாட்களுக்குப் பிறகு...

கொஞ்சம் பொறுங்க. உங்களோட எல்லா பதிவுகளையும் பார்த்திட்டு வாறேன்.

சந்தனமுல்லைsaid...

:)) படம் அழகு!!

நாமக்கல் சிபிsaid...

//என்ன பங்கு உங்க ரேட்மார்க் கிகிகி யை காட்டியிருந்தால் கிளி உங்களுக்கு ஜோசியமே பார்த்திருக்கும்.//

அதானே!