சில 'பிரபல' பதிவர்களும், விவசாயமும் (அதிரடி பதிவு)



நம்மள சுத்தி இருக்கிற பதிவர்களில் பலர் நிலத்தை வாங்கி போட்டு விவசாயம் பண்ண தொடங்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அட மொக்கை பதிவு போட்டடே காலம் தள்ளுற (என்னைப்போன்ற..கிகிகி) பதிவர்களே இப்படி புத்திசாலித்தனமா விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களேன்னு, நானும் கொஞ்ச நிலத்தை வாங்கி போட்டிருக்கேன்.

நாம தான் விவசாயத்துக்கு புதுசாச்சேன்னு நம்ம மொக்கை விவசாயி...ச்ச் சாரி நம்ம சஞ்சய் விவசாயி நிலத்துக்கு போனா, அங்கு பயிர் எல்லாம் காஞ்சு போய் கிடக்கு. என்ன கொடுமை சஞ்சய்? கிராமத்துக்கு என்று தனி வலைப்பூ வைத்தால் மட்டும் போதுமா? பயிர் செய்ய தெரிய வேண்டாமா??

சரி சஞ்சய் போனால் என்ன, அவரோட நெருங்கிய நண்பர் என்னோட ஜோசப் அண்ணா நிலத்துக்கு போனேன். அட கொடுமை கொடுமைனனூ கோயிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை நாக்கு முக்கா ஆடிட்டில்ல இருக்கு. பின்ன, ஒரு ஊருக்கே தானியம் தரலாம் போல!! இதில மூன்று யானைய வேற கட்டி போட்டிருக்கார்...சிங்கையில இது தான் வேலை போல..

கானாஸ் நிலத்தை பத்தி சொல்லவே வேண்டாம். ஏதோ பாட்டு போட்டதுக்காக அவரோட ரசிகர் யாரோ நிலத்தை எழுதி வச்சிட்டாங்களாம். அட கழுதைக்கு (சாரி கானாஸ்)தெரியுமா கற்பூர வாசனை.கிகிகி என்னிக்கோ நட்ட ஸ்டோபரி மரம் கருவாடா போய் கிடக்கு. கானாட்ட பாட்டை தான் எதிர்பார்க்கணும், பயிரை அல்ல

அடுத்து என் பெரிய பங்கு (வந்தியத்தேவன்) நிலத்து போய் பார்த்தேன். அப்புறம் தான் தெரிஞ்சுது போகாமலே இருந்திருக்கலாம் என. பின்ன என்ன, நட்டதே நாலு ஸ்டோபரி. அதில பாதி காஞ்சு போய்டிச்சு. மீதிக்கு தான் பக்கத்தில ஒரு பசுவை கட்டி போட்டிருக்காரே. ம்ம்கும் பங்கை பார்த்து எங்க நான் விவசாயம் பண்ண?

சரி அடுத்து ஒரு பொம்பளபிள்ளை நிலத்துக்கு போகலாம்னு நினைச்சிட்டு, இயற்கையின் விவசாயத்தை பார்க்க போனேன். என்ன சொல்லுங்க, பொண்ணுங்க பொண்ணுங்க தான். அழகா நிலத்தை வடிவமைத்து....இவங்கள முதல்லயே பார்த்திருக்கலாம்னு தோணுது இப்போ..

ரொம்ப முக்கியமான விசயம் என்ன என்றால், நம்ம ஆசிப் அண்ணா தான் விவசாயத்தில முன்னுக்கு நிற்கிறார். ஒரு மனுசனுக்கு பேராசை கூடாது என்கிறேன்..போய் பாருங்க அவரோட நிலத்தை. தலை சுத்திடும். அண்ணா இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார் என்று இப்போ தான் புரிஞ்சுது. ஒரு மனுசன் ஒரு யானை வளர்க்கலாம், சரி நாலு யானை வளர்க்கலாம்....ஆனால் காட்டில இருக்கிற அத்தனை யானையையும் புடிச்சிட்டு வந்து வளர்க்கிறது என்பது....என்னத்த சொல்ல..

இன்னும் சிலரோடத நீங்களே உங்க Facebook Farmville ல போய் பார்த்துக்குங்க. பதிவெழுத நேரம் இல்லைன்னு சொல்லிட்டு அந்த பக்கமா விவசாயம் எல்லோ பண்ணிட்டு இருந்திருக்காங்க இவங்க..பிடிச்சிட்டோம்ல..நாங்களும் நிலத்தை வாங்கி பயிர்பண்ண ஆரம்பிச்சாச்சு. யாருக்காச்சும் மரம், மிருகங்கள் வேணும்னா சொல்லுங்க..அனுப்பிடுவோம்ல ;)

இதில பெரிய கொடுமை என்ன என்றா, சில பேரு வச்சிருக்கிறதே நாலு காஞ்சு போன செடி. சரி என்ன தான் இருக்குன்னு அவங்க நிலத்தை பார்க்க போனா, காக்கா என் பயிரை எடுக்குது, விரட்டி விடுன்னு சொல்லுறாங்க. எலே காஞ்ச தோட்டத்துக்கு ஒரு காக்கா, அதை நாங்க விரட்டனுமா..

பி.கு:
1. பிரபல பதிவர்கள் என குறிப்பிட்டதற்காக எனக்கு ஒரு யானையை அனுப்புங்கன்னு கேட்க மாட்டேன்.
2. நான் யாரையும் மிரட்டி எனக்கு இன்று என்ன அனுப்பினிங்க? அப்படி கேட்பதேயில்லை.
3. பதிவின் தலைப்பு எப்படி ;)

கிகிகி வரட்டா ;)

46 comments:

ஆயில்யன்said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


//அட கழுதைக்கு (சாரி கானாஸ்)தெரியுமா கற்பூர வாசனை//

ஒரு வாசக சொன்னாலும் திருவாசகம் சிஸ்டர் கிகிகிகிகி :))

பிரியமுடன்...வசந்த்said...

ஹ ஹ ஹா

பயிர் செய்து பொழைக்கணும்னு யாரோ சொன்னாங்கன்றதுக்காக இப்படியா?

நாங்கள் இப்போதான் அ ஆ எழுத ஆரம்பிச்சுருக்கொம் சீகிரம் பெரிய விவசாயியா வருவோம்ல ...

ஆயில்யன்said...

//இன்னும் சிலரோடத நீங்களே உங்க Facebook Farmville ல போய் பார்த்துக்குங்க. பதிவெழுத நேரம் இல்லைன்னு //

வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ சொல்லிட்டு எஸ்ஸாகியாச்சா :)

♥ தூயா ♥ Thooya ♥said...

//ஒரு வாசக சொன்னாலும் திருவாசகம் சிஸ்டர் கிகிகிகிகி :))//

யாருலே இது? எரியுற நெருப்பில எண்ணய ஊத்திகிட்டு..

கிகிகி

’டொன்’ லீsaid...

என்னுடைய நிலத்துக்கு வாராமல் போனதுக்கு வன்மையான கண்டங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

நாமக்கல் சிபிsaid...

//ஒரு வாசக சொன்னாலும் திருவாசகம் சிஸ்டர் கிகிகிகிகி :))//

ட்ரிப்பிள் ரிப்பீட்டேய்!

♥ தூயா ♥ Thooya ♥said...

எனக்கு ஏன் மரம் தரலை?

ஜோசப் பால்ராஜ்said...

மாடுகட்டி போரடித்தால் மாளாது
என்று யாணை கட்டி போரடிக்கிறேன் பாப்பு.

சரி , இன்னைக்கு ஒரு பசுமாடு சீதனமா அனுப்சேனே, வந்துச்சா? நாளைக்கு ஒரு ஆட்டுக்குட்டி அனுப்புறேன். சரியா?

♥ தூயா ♥ Thooya ♥said...

//சரி , இன்னைக்கு ஒரு பசுமாடு சீதனமா அனுப்சேனே, வந்துச்சா? நாளைக்கு ஒரு ஆட்டுக்குட்டி அனுப்புறேன். சரியா?//

வந்திச்சே..ஆனாலும் சிங்கையில இருந்து ஆஸிக்கு இரண்டு விமானத்தில வந்ததில களைச்சிடிச்சாம்...

தமிழ் பிரியன்said...

Kikikikiki

SanjaiGandhisaid...

எலேய்.. நானெல்லாம் நிஜ விவசாயி.. உங்கள மாதிரி போலி டிஜிட்டல் விவசாயி இல்லை..

எவன் தான் அதை கண்டுபிடிச்சானோ.. கொசுத்தொல்லை தாங்க முடியலை.. :(

ஆபிஸ்ல வேலை பாருங்கய்யான்னு சொன்னா ஃபேஸ்புக்ல வெவசாயம் பாக்கறாங்களாம்.. எவ்ளோ பேர் வெட்டியா இருக்காங்கன்னு அங்க போய் தெரிஞ்சிக்கலாம். :))

அதென்ன லேபிளில் இயற்கை பேர் மட்டும் போட்டிருக்க? எங்க பேர் எல்லாம் ஏன் இல்லை?

ராஜி & நம்ம ஐஸ் எதோ அப்பார்ட்மெண்ட் கட்டி இருக்காங்களாம்.. அதையும் பார்.. அங்கயும் ஒரு கடை போடு.. நான் மேத்யூவுக்கு மெயில் போடறேன்..

♥ தூயா ♥ Thooya ♥said...

//எலேய்.. நானெல்லாம் நிஜ விவசாயி.. உங்கள மாதிரி போலி டிஜிட்டல் விவசாயி இல்லை..//

இது தான் "ச்சே இந்த பழம் புளிக்கும்" கதை..

ஐஸு வீட்டுக்கு உடனே போகணுமே..விலாசம் என்ன?

மேத்யூவுக்கு உங்க போட்டோவ காட்டினேன்.. பேயடிச்ச போலவே இருக்கான்...ஏன்னு தெரியல ;)

வந்தியத்தேவன்said...

என்னுடைய நிலத்தில் அத்துமீறிய என் பங்குக்கு கண்டனங்கள். இன்னும் சில நாள் பொறுங்கள் நான் எம்ஜீஆர் போல் விவசாயி விவசாயி எனப் பாடிக்கொண்டு வராவிட்டால்.

எங்களை எல்லாம் பிரபல பதிவர் என்றதற்க்கு கண்டனங்கள். நாங்கள் எல்லாம் மொக்கைப் பதிவருங்கோ.

கானா பழமொழி கலக்கல்.

SanjaiGandhisaid...

அடப்பாவி.. மேத்யூ தங்கச்சி கேட்டதா தானே வாங்கின? அவர் கிட்ட எதுக்கு காட்டின?

ஆனாலும் நீ பொறாமைல பொங்காதே கண்ணம்மா.. :))

SanjaiGandhisaid...

//ஐஸு வீட்டுக்கு உடனே போகணுமே..விலாசம் என்ன?//

கடுப்பேத்தாத.. அவ என்னை தொரத்திட்டா.. அவ ஐடி வச்சி நீயே போய்க்கோ.

இராஜலெட்சுமி பக்கிரிசாமிsaid...

Sanjay, Iyarkai... ha ha ha...

வந்தியத்தேவன்said...

இப்போ என் தோட்டத்தில் நிறைய தூயாக்களும்(செம்மறி ஆடு)ஒரு கானாவும் இரண்டு டொன்லீயும் இருக்கு.

Suresh Kumarsaid...

என்ன விவசாயத்தை இங்கேயும் ஆரம்பிசீட்டீங்களா ?

கார்க்கிsaid...

கிகிகிகி

நான் விட்டுட்டேனே...

ஜீவன்said...

;;))

இய‌ற்கைsaid...

இயற்கைன்னு பேர் வச்சிகிட்டு விவசாயம் ஒழுங்கா பண்ணாம இருக்கமுடியாதே

இய‌ற்கைsaid...

//பதிவெழுத நேரம் இல்லைன்னு சொல்லிட்டு அந்த பக்கமா விவசாயம் எல்லோ பண்ணிட்டு இருந்திருக்காங்க இவங்க//

இப்பிடி உண்மையெல்லாம் வெளில சொல்லிட்டீங்களே .. இனிமே வேலை அதிகம் அதான் பதிவு எழுதலன்னு சொல்லிகிட்டு சுத்தமுடியாதே;-(

இய‌ற்கைsaid...

இந்த பதிவுக்காகவே ஒரு கிஃப்ட் அதிகமா அனுப்பலாம்ன்னு தான் பார்த்தேன்..Farmville விடமாட்டேங்குது;-)

Princesssaid...

ha ha ha...
sooper.. neenga solra maari ponunga than azhaga maintain panranga. :D

சின்ன அம்மிணிsaid...

நாந்தான் விவசாயத்தில ரொம்ப பின் தங்கி இருக்கேன்னு நினைச்சேன். எல்லாம் லெவல் 23 , 24 ன்னு விளையாடிக்கிட்டு இருக்காங்க

ராமலக்ஷ்மிsaid...

:))!

ஜெகதீசன்said...

friend request அனுப்பிருக்கேன்....
:)

ஆசிப் மீரான்said...

ஆபிஸ்ல வேலை பாருங்கய்யான்னு சொன்னா ஃபேஸ்புக்ல வெவசாயம் பாக்கறாங்களாம்.. எவ்ளோ பேர் வெட்டியா இருக்காங்கன்னு அங்க போய் தெரிஞ்சிக்கலாம். :))///

சஞ்சயை வன்மையாகக் கண்ணடிக்கிறேன் :-) யோவ் சஞ்சய்..இதை வெளயாடித்தான் நாங்க வெட்டியா இருக்கமாக்கும் நாங்கள்லாம் பரம்பரை வெட்டிங்க.. அதப் புரிஞ்சுக்க முதல்ல :-)

ஆசிப் மீரான்said...

ஆபிஸ்ல வேலை பாருங்கய்யான்னு சொன்னா ஃபேஸ்புக்ல வெவசாயம் பாக்கறாங்களாம்.. எவ்ளோ பேர் வெட்டியா இருக்காங்கன்னு அங்க போய் தெரிஞ்சிக்கலாம். :))///

சஞ்சயை வன்மையாகக் கண்ணடிக்கிறேன் :-) யோவ் சஞ்சய்..இதை வெளயாடித்தான் நாங்க வெட்டியா இருக்கமாக்கும் நாங்கள்லாம் பரம்பரை வெட்டிங்க.. அதப் புரிஞ்சுக்க முதல்ல :-)

ஆசிப் மீரான்said...

எகாட்டில இருக்கிற அத்தனை யானையையும் புடிச்சிட்டு வந்து வளர்க்கிறது என்பது....என்னத்த சொல்ல.///

ஏம்மா தங்காச்சி..இது உனக்கே ஓவரா தெரியலை யானையெல்லாம் அன்பளிப்பா கெடச்சது. எம் மேல மக்களுக்கு அம்புட்டு ப்ரியம். ரொம்ப அல்லவங்களா இருக்காங்க எல்லாரும்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல்said...

ஆஹா இப்படி ஒரு கூட்டம் ஆரம்பிச்சிருக்கா

அது சரி

Sinthusaid...

என்ன தூயா அக்கா, உங்களுக்கும் gift வேணும் என்று சொன்னால் அனுப்பிட்டு போறது, எப்ப விவசாயம் செய்ய வந்தீங்க..?

Sinthusaid...

இப்போதெல்லாம், Farm Ville க்கு எதிரான குழுக்கள் எல்லாம் முகப் புத்தகத்தில் உலாவுகிறது, அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

☀நான் ஆதவன்☀said...

ஓ நீங்களும் இருக்கீகளா? பக்கத்து வீட்டுகாரரா மாறிடுறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதிsaid...

நம்ம ஜெகதீசன்(சேகு,ஜேக்,தமிழன்,ஆமத்தூரார், குர(ற)ல் கொடுக்கும் தமிழன்) என்னை வெவசாயம் பண்ணச்சொன்னார்!

நாமளே தார் குச்சியாள குத்துனாலும் கிளம்பமாட்டோம்.

நம்மள தொடர்ந்து வெவசாயம் பாக்கச் சொல்லி தொந்தரவு கொடுத்தா எப்படிப் போறது?

அந்த வெவசாயத்துக்குப் பயந்து தானே இவ்வளவு தூரம் சிங்கப்பூருல வந்து கிடக்கிறோம்.

அது தெரியாம எங்களத் தொல்லை பண்ணுனா நாங்க என்ன பண்றது.

இதை கேக்க யாரும் இல்லையா?

கானா பிரபாsaid...

அடப்பாவிங்களா, பிளாக்கர், ட்விட்டர் என்று தொடங்கி Facebook ஐயும் சின்னாபின்னப்படுத்த ஆரம்பிச்சிட்டீங்களா

யாரப்பா அது எனக்கே தெரியாமல் பாட்டுக் கொடுத்ததற்கு எனக்கு காணி நிலம் தந்தது ;)

நட்புடன் ஜமால்said...

ஃபேஸ் புக் வைத்து காமெடி பன்னிட்டேள் ...

பித்தனின் வாக்குsaid...

நான் இன்றுதான் தங்களின் பதிவை பார்த்தேன், இனி தங்களின் பதிவுகளையும் படிக்கின்றேன். நன்றி.

U.P.Tharsansaid...

அட நானும் இதைபற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் நீங்க போட்டாச்சா? :-)) சரி வேனும்னா சொல்லுங்க ஒரு யானை அனுப்பிவிடுறன்.

Mukilinisaid...

Thooya ozhiga,.,, I became addicted to this stupid game cos of u.. sigh..

btw, pls join the game

http://the-nutty-s.blogspot.com/2009/10/blog-post_8090.html

Balavasakansaid...

நாங்க பிரபல பதிவர் இல்ல இப்பதான் ஆரம்பித்தோம் நல்லாத்தான் போகுது ஆனா விவசாயம்தான் கெட்டு போச்சு
நேரம் இல்லை.
பதிவுலகிற்கு வந்து என் முந்திரி தோட்டம் கருகி போச்சு.

ஷோபிகண்ணுsaid...

இது ஒரு மாதிரியா நல்லாத்தான்யா இருக்கு.............. எனக்கு சோக்கா புடிச்சிச்சிச்சி உங்க விவசாயம்....

நிஜமா நல்லவன்said...

/ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


//அட கழுதைக்கு (சாரி கானாஸ்)தெரியுமா கற்பூர வாசனை//

ஒரு வாசக சொன்னாலும் திருவாசகம் சிஸ்டர் கிகிகிகிகி :))/


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...:)

♥ தூயா ♥ Thooya ♥said...

பின்னோட்ட மின்னல் மக்களுக்கு நன்றி. விவசாயம் பார்க்கிறதில இந்த பக்கம் வரலை...இனி வந்திடுறேன்..

Mukilinisaid...

A small appreciation... http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html

முகிலினிsaid...

உங்களை தொடர் பதிவொன்றிற்கு அன்புடன் அழைத்திருக்கிறேன்...வந்து கலக்குங்கள்...

http://the-nutty-s.blogspot.com/2009/11/4-39.html