என் வலையுலக, இணைய நட்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்,
அனைவரும் நலம் தானே? உங்கள் நலத்திற்கு சாமிகிட்ட வேண்டிக்கிறேன். நல்ல பிள்ளைகளா இருக்கிறிங்க தானே? இல்லைன்னா சாமி கண்ணை குத்தும். கிகிகிகி
பல மாதங்களாகவே வலையில் அதிகம் எழுத முடியவில்லை. முன்னர் நாட்டு பிரச்சனையோடு எழுத மனமில்லாமல் இருந்தது. பின்னர் வேலை காரணமாக எழுத முடியவில்லை. இப்படியாக நான் எழுதாமல் இருந்தது உங்களுக்கு எத்தனை தூரம் நிம்மதியான ஒரு விடயம் என எனக்கு தெரியும்.
இருந்தாலும், சொ.செ.சூ வச்சு தான் ஆவேன்னு அடம்பிடித்து எனக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி 'எழுது எழுது எழுது' ன்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கு தெரியுமா. பாசக்கார புள்ளக. ஏமாத்த முடியுமா! மன்னிக்கனும் எழுதாமல் விட்டதற்கு. மிக்க நன்றிகள் என் பதில் கூட எதிர்பார்க்காமல் அடிக்கடி என்னை சுகம் விசாரித்ததற்கு. உங்களில் சிலருடைய செல்ல திட்டுக்கள் கூட மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது. கிகிகி
என் வலைப்பூவில் எழுதாவிடினும், உங்களில் சிலருடைய பதிவுகளை வாசித்து கொண்டு தான் இருந்தேன். உங்கள் அன்பிற்கு நன்றி. மின்னஞ்சல், வலைப்பூ, தொலைபேசி என அடிக்கடி தொடர்பு கொண்டு என் சுகம் விசாரித்ததற்கு மிக்க நன்றி. வலையில் எழுதும் போது நினைச்சிட்டு இருந்தேன் "எனக்கு நிறைய ப்ளொக்கர்ஸ தெரியும்" அப்படி. ஆனால் எழுதாமல் விட்ட போது தான் எத்தனை நட்புள்ளங்களை சம்பாதித்து வைத்திருக்கேன் என்பது புரிகின்றது.
வேலைகாரணமாக நான் எழுதாவிடினும் உங்களை மறந்துவிடவில்லை. என் மன்னிப்பையும் நன்றியையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
God bless all
என் நன்றிகளும் மன்னிப்புகளும்
Posted by
♥ தூயா ♥ Thooya ♥
at
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)

14 comments:
வாங்க வாங்க !!! எத்தனை காலம் ஆச்சு உங்களைப் பார்த்து !! எழுத்தும் வாசிப்பைப் போல நிறைய ஆறுதலைத் தரக்கூடியது. ஆகையால் தொடர்ந்து எழுதுங்க
அன்பு தூயா
நானும் உங்களை தேடினேன். எங்கேடா ஆளெயே காணொமேன்னு.
நலம் தானே.
மீண்டும் வருக ! ! !
அதெதுக்கு - வந்துட்டியல்ல
அப்படியே சமையலையும் போட வேண்டியது தானே!
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...வாழ்க்கை பிரச்சினையில்லாமல் போதேன்னு நினைச்சேன்....
IS VERY GOOD..............................
sure, with open mind :)
I missed you a lot and your comments.
karthik +amma
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
why didn't u talk to me for so many days? i felt depressed and dejected.
karthik amma
why didn't u talk to me for so many days? i felt depressed and dejected.
karthik amma
Happy Happy Return !!!!
அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/
வாங்க வாங்க !!!
வருக ! !
Post a Comment