நான் சொல்வதெல்லாம் உண்மை


ஒஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது ஏன்?


-----------------------------------------------------------------------------

மிகவும் வேதனைக்குரிய சம்பவங்களும் செய்திகளும். ஒஸ்திரேலியா முழுவதும் இப்போதெல்லாம் வட இந்தியர்கள் தான் அதிகம். கடந்த 5 ஆண்டுகளுக்குள் இத்தனை பேர் எப்படி வந்தார்கள் என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். இதே விசாவை ஈழத்தவர்களுக்கு தந்திருக்கலாமே என தோன்றும்.

எனக்கு தெரிந்து பல்கலைக்கழகத்தில் இப்போதெல்லாம் வட இந்தியர்கள் தான் அதிகம். வந்த ஒரு மாதத்திலேயே ஒஸ்திரேலியாவை கண்டுபிடித்ததே அவர்கள் தான் என்பது போல நடந்து கொள்வார்கள். இதில் தென் இந்திய மாணவர்கள் தான் பாவம். இந்தியர் எனும் ஒரே காரணத்தினாலேயே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் சில இந்தியர்கள் சொல்லும் கதைகள் ரொம்பவே நகைச்சுவையாக உள்ளது. ஒஸ்திரேலிய அரசு விசா குடுப்பது மாணவர்களிடம் இருந்து பணம் எடுக்கத்தானாம். அதற்கு அப்புறம் இங்கு நடப்பது அவர்களுக்கு தெரியாது போல! இங்கு வந்த எத்தனை மாணவர்கள் மறுபடி இந்தியாவுக்கு செல்கின்றனர்? விபரம் தெரிந்தவர்கள் கூட்டி, கழிச்சு பாருங்கள்..யாருக்கு யாரால் லாபம் என தெரிந்துவிடும்.

மற்றைய காரணங்களை விட்டுவிடலாம். ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காக வட இந்தியர்களை ஒஸ்திரேலியர்கள் அடிப்பதை நான் ஆதரிப்பேன். 'பெண்கள்' என வரும் போது மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். இந்தியாவில் பெண்களே இல்லை என்பது போலவும், ஒஸ்திரேலியாவில் தான் பெண்களை முதன் முதலில் பார்ப்பது போலவும்......அதிகம் இதை பற்றி எழுதவே முடியவில்லை...அத்தனையும் 'ச்சே அசிங்கம்'

இரண்டு வாரமாக அனைவரும் வேலையிடத்தில் என்னிடம் விசாரிப்பது இதை பற்றி தான். எங்களுக்கு எங்க பிரச்சனையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை..இதில் எம்மை அழிக்க உறுதுணையாக இருந்த வட 'இந்திய' மாணவர்களை பற்றி கேட்பவர்களுக்கு விபரம் சொல்லணுமா?

உண்மையை சொல்லணும் என்றால் "எம் ஈழத்தில் பல உயிர்களையும், பல பெண்களையும் சூறையாடியவர்களை" யார் அடித்தாலும் சந்தோசமே....செத்து போங்கடா!



------------------------------------------------------------------------------
இனி படித்த செய்தி எழுதியது ரகுநாதன்:


அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேணில் "இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல்கள்" என்ற செய்தியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்திய தேசியம் என்ற வட்டத்திற்குள் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால்த்தான் இவ்வாறான சம்பவங்கள் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் எந்தப் பிண்ணணியில் நடக்கின்றன என்று ஆராய்வது மிகவும் அவசியமானதாகும்.

நான் கடந்த 6, 7 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வருகிறேன். சிட்னியில் நான் வசிக்கும் வெஸ்ட்மீட் மற்றும் கரீஸ்பாக் போன்ற பகுதிகள் 80 வீதமான இந்தியரைக் கொண்டவை. மேலும் இன்றுவரை, இந்தியாவிலிருந்து வந்து குடியேறும் அனைத்து இந்தியர்களுமே இந்த இரு பகுதிகளையும் குறிவைத்தே வருகின்றனர். முன்னர், பல்லினத்தவரையும் கொண்ட நகர்களாகக் காட்சியளித்த இந்த இரு பகுதிகளும் இன்று கிட்டத்தட்ட முழு இந்திய குடியேற்றங்களாக மாறி வருகின்றன. இப்பகுதியில் முன்னர் குடியிருந்த வெள்ளையர், சீனர், இத்தாலி நாட்டுக்காரர், இலங்கையின் தமிழீழப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர் போன்றவர்கள் சிறிது சிறிதாக இப்பகுதிகளை விட்டு வெளியேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான பிண்ணனியிலேயே இந்தத் தாக்குதல்கள் பற்றி நாம் ஆராய வேண்டும்.

முதலாவதாக, இன்றைய பொருளாதார தேக்க நிலையில் அவுஸ்த்திரேலியாவின் வேலை வாய்ப்பிண்மை 4 % இலிருந்து சடுதியாக 8% ஆக அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. பல தொழிலதிபர்கள் தமது செலவினைக் குறைக்கும் முகமாக பல தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றனர். அவ்வாறான இடங்களுக்கு பகுதிநேர தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்திய மாணவர்களை அமர்த்த இந்த தொழில் அதிபர்கள் விரும்புகின்றனர். சராசரியாக 22 டால மணித்தியாலத்துக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 அல்லது 8 டாலருக்கு இந்திய மாணவர்கள் வேலை செய்ய விரும்புவதால் இவ்வாறான வேலை வாய்ப்பிண்மை அதிகரித்துக்கொண்டு போகிறது. இங்கு பலர் வாதாடலாம், இந்திய மாணவர்கள் மட்டும்தானா இங்கு வருகிறார்கள் என்று, உண்மையிலேயே இன்றைய நிலவரப்படி படிக்கவென்று அவுஸ்த்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களில் 90 வீதமானவர்கள் வட இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என்பது புள்ளிவிபரப்படி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவுஸ்த்திரேலிய அரசு மீது பல சமூக வியல் அமைப்புகள் இவ்வாறான வீசா அனுமதிகளைக் குறைக்குமாறும், முழுவதுமாக ரத்துச் செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறன. இதன் வெளிப்பாடுதான் அண்மையில் அரசு முன்மொழிந்திருக்கும் ""தொழில்சார் வீசாக்களுக்கான கட்டுப்பாடு" என்ற தீர்மானத்தைப் பார்க்கலாம். ஆகவே தமது வேலை வாய்ப்பிண்மைக்குக் காரணம் இந்த வட இந்தியர்கள் தான் என்கிற மனநிலை சாதாரண அவுஸ்த்திரேலியக் குடிமகனிடம் காணப்படுகிறது. ஆகவே இதுவே இந்திய மாண்வர்கள் மீதான தாக்குதலை உக்குவித்திருக்கலாம்.

ரெண்டாவது, இந்தியர்கள் செறிந்துவாழும் நகரங்களில் வீட்டு விலைகளும், வாடகையும் மற்ற இடங்களிலும் பார்க்க மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால், 3 அல்லது 4 பேர் மட்டுமே வசிக்கக் கூடிய இரு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் 8 முதல் 10 வரையான இந்திய மாணவர்கள் வசிப்பது. 300 டாலர் மட்டுமே வாராந்த வாடகையாகச் செலுத்தக் கூடிய இந்த வீடுகளை இந்திய மானவர்கள் 400 டாலருக்கு ஏலம் எடுக்கின்றனர்.இதனால் இங்கு வாழ என்று வரும் குடும்பங்கள் அதிக வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடுவதையும், வேறு நகர்கள் நோக்கிச் செல்வதையும் காணமுடிகிறது. 8 அல்லது 10 இந்திய மாணவர்களால் போட்டி மூலம் ஏலம் எடுக்கப்படும் இந்த வீட்டு வாடகையை இவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவருக்கு வெறும் 40 அல்லது 50 டாலர்கள் தான் வாரத்துக்கு செலவாகிறது. இவ்வாறே வீடுகள் வாங்கும்போது நடக்கிறது. ரெண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவ்யு செய்வதால் வீடுகளின் விலையும் இப்பகுதிகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலையேற்றங்கள் மற்ற அவுஸ்த்திரேலியர்களை இப்பகுதிகலை விட்டு போகச் செய்வதுடன், அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுவும் ஒரு காரனம் இந்த வட இந்திய மாணவர்கள் மீதான் தாக்குதல்களுக்கு.

மூன்றாவது வட இந்திய மாணவர்கள் இங்குநடந்து கொள்ளும் விதம் பற்றியது. இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் என்னவென்றால், பொது இடங்களிலோ அல்லது புகையிரதம், பேரூந்து போன்ற மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இந்திய மாணவர்களின் செயல் எவ்வாறான முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிறதென்பது. பொது இடங்களில் கூடும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகவும் உச்ச தொணியில் தமக்குல் பேசிக்கொள்வதும், தொலைபேசியில் உரையாடுவதுமான நிகழ்வுகள். காலை மற்றும் மாலை நேரங்களில் வெலை நிமித்தம் புகையிரதங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான அவுஸ்த்திரேலியர்கள் தினமும் சந்திக்கும் இந்த "இந்திக் கூச்சல்கள்". நூற்றுக்கணக்கான பயணிகள் அமைதியாக மர்ந்திருக்கும் ஒரு புகையிரதப் பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்தப் பெட்டி முழுவதற்குமே கேட்குமளவிற்கு உச்ச ஸ்த்தானியில் பேசும் இரு இந்தியர்கள், அல்லது தொலைபேசியில் காதலியுடனோ அல்லது காதலனுடனோ ரசித்து உரையாடும் இந்திய இளைஞர்கள். தம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு நாம் சங்கடமாக இருக்கிறோம் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் தனது வீட்டில் இந்தியாவில் இருப்பது போன்ற பிரமையில் தம்மையறியாது கூக்குரலிடும் வட இந்திய மாணவர்கள். இவ்வலவிற்கும் அந்த மாணவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களில்லை. ஆனால் வேண்டுமென்றே தமது வட இந்திய மொழியில் சத்தமாக மற்றவர்கள் முன்னால் சத்தமாகப் பேசுவதை கவுரவமாக நினைப்பதால் இது நடக்கிறது. எவரும் இதைத் தட்டிக் கேட்டாலோ அல்லது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாலோ அவரை நோக்கி இரு வாரத்தைகலை வீசிவிட்டு மீண்டும் தமது பேச்சைத் தொடர்வார்கள்.

இதேபோல் தாம் குடியிருக்கும் பகுதிகளில் இரவு வேளைகளில் மதுபோதையில் இவர்கள் அடிக்கும் கும்மாளம். சில வேளைகளில் காலை 2 அல்லது 3 மணிவரை இந்தியில் உச்ச ஸ்த்தானியில் பாடலும், கூச்சல்களும் தொடரும். அவுஸ்த்திரேலியர்கள் மது அருந்துவதென்றால் மதுக்கடைகளுக்கே செல்வது வழமை. எவரும் வீடுகளில் மது அருந்திக்கொண்டு மற்றவர்களைக் குழப்புவதில்லை.இரவு 10 மணிக்குப் பின்னர் எவரும் கூச்சல் போடக்கூடாதென்று ஒரு விதியிருக்கு. அயலவர்கள் பொலீசிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் இவர்களின் அட்டகாசம் குறைவதில்லை. எனது மாடியினருகிலுள்ள எல்லா வீடுகளிலும் இந்தியர்களே வசிக்கிறார்கள். இரவு நேரங்களில் குறிப்பாக வெள்ளி மற்று வார விடுமுறை நாட்களில் இந்தப் பிரதேசம் அவுஸ்த்திரேலியாதானா அல்லது இந்தியாவின் மும்பாயா என்கிற சந்தேகம் வந்திவிடும் எனக்கு. இதனால் பலமுறை போலீசார் இங்கு வந்து போவதும் மற்ற இனத்தாருடன் இந்தியர்கள் தர்க்கத்தில் ஈடுபடுவது இங்கு சர்வ சாதாரணம். இந்திய தேசியவாதத்துக்குள் இருந்து பார்க்குமொருவருக்கு இவர்கள் இங்கே செய்யும் செயல்கள் கண்ணுக்குத் தெரியாது. ஏதோ அப்பாவிகளை இனவாதிகள் அடிப்பதாகத்தான் நினைத்து விடுகிறார்கள்.

நான்காவது, வேலை செய்யுமிடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். எங்கு ரெண்டு இந்தியர்கள் கூடிவிடுகிறார்களோ அங்கு உடனேயே கிந்தியில் சத்தமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி அந்த அலுவலகத்தில் கிந்தி தெரியாத மற்ற மொழிக்காரர்களும் இருக்கிறார்களே என்கிற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் தம்பாட்டிற்கு சத்தமாக பெசுவார்கள். இதனால் இவர்களுடன் ஒரே மேசையிலிருந்தோ அல்லது ஒரே அறையிலிருந்தோ வேலைபார்க்கும் வேற்று மொழிக்காரர் சங்கடப்பட்டு நெழிவதும், என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முளிப்பதும் இங்கு சர்வ சாதாரனம். எவரும் தட்டிக்கேட்டால், "எமக்கு கிந்தியில் ம்பேசுவதுதான் சுலபம், ஆகவே நீங்கள் வேண்டுமான நாங்கள் பேசி முடியும்வரை வெளியே இருந்து விட்டு வாருங்கள்" என்று மிக அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள். "இங்கு பல இந்தி பேசும் இந்தியர்கள் இருக்கிறார்கள், ஏன் நீங்களும் இந்தி கற்கக் கூடாது" என்று என்னிடம் அடிக்கடி இவர்கள் கேட்பதுண்டு. பலமுறை இதனால் என்னுடன் இவர்கள் தர்க்கித்திருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியர்களும் சில வேளைகளில் இவர்களது தொல்லை தாங்க முடியாது இவர்களுடன் தர்கிப்பார்கள். அப்போதெல்லாம்" இந்த நாடு சரியில்லை, இங்கிருக்க எமக்குப் பிடிக்கவில்லை, உங்கள் கலாச்சாரம் கேவலமானது" என்று அவுஸ்திரேலியர்களிடம் ஆவேசமாக இவர்கள் கூறும்போது "அப்படியானால் உங்கள் நாட்டிற்குச் சென்று வாழ்வதுதானே? எதற்கு எங்கள் வரிப்பணத்தில் இருந்துகொண்டு எங்களைச் சாகடிக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு அவுஸ்த்திரேலியர்கள் சொல்வதையும் பலமுறை கண்டிருக்கிறேன். இங்கிருக்கும்வரை உழைக்க முடியுமானதை உழைத்துவிட்டு இறுதியில் உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்கள் கலாச்சாரத்தில் வாழ எங்கலுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவரும் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்தியா தரமான நாடென்றால் அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதற்கு இங்கே வந்தீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

இறுதியாக, மெல்பேணில் அண்மையில் ஒரு இந்தியர் தாக்கப்பட்டது அவர் இந்தியர் என்பதற்காக அல்ல. மாறாக இனவெறி பிடித்த சிங்களவர் கூட்டமொன்று வழியில் செல்லும் திராவிடர் போன்ற தோற்றமளித்த வட இந்தியரைத் தமிழர் என்று நினைத்து விட்டதனால்த்தான். அடி வாங்கி முடியும் தறுவாயில், அடித்தவர்களில் ஒருவர் "நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்" என்று கேட்கும்போது தான் வட இந்தியர் என்று சொல்லியதால் அவரை விட்டார்கள். ஆனால் இதையும் வெள்ளைக்காரர் செய்ததாக பலர் காட்ட முனைதது வேதனைக்குரியது.

நன்றி ரகுநாதன்
நன்றி யாழ்

மகிந்த ராஜபக்சேவின் இறந்த உடல்




மெயிலில் கிடைத்தது..

நியூசிலாந்து நாட்டு பிரஜை எமக்காக உண்ணாநிலையில்...


எமக்காக உண்ணாநிலை இருக்கும் சகோதரனுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்...இவருக்காவது உலகத்தில் பதில் கிடைக்குமா?! நம்புவோம்..



நியூசிலாந்தில் உண்ணாநிலைப் போராட்டம்


சிங்களப் பேரினவாத அட்டூழியத்தின் பிடியில் சிக்கித் தவித்திக் கொண்டிதருக்கும் எம் தமிழ் உறவுகளின் உண்மை நிலையை சர்வதேச மக்களுக்குத் தெரிவிக்குமுகமாக நியூசிலாந்து நாட்டு பிரஜையான திரு Stu Colquhoun என்னும் ஒக்குலாந்து பல்கலைக்கழக மாணவன் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு...: http://www.pathivu.com/news/1910/54//d,view.aspx